குந்தவை நாச்சியார் கல்லூரி ஆண்டு நிறைவு விழாக்களின் இரண்டாவது நிகழ்வாக நேற்று நுண்கலை மன்ற விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் பேச்சாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில் மாணவிகள் தங்களுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். நம் தமிழ் மொழி மனதைப் பண்படுத்தும், ஒவ்வொருவரும் தம்மை முதலில் நேசிக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியாளராக முடியும். மார்க்ஸ் குறித்தும் அவர் மனைவி ஜென்னி மற்றும் சேகுவேரா ஆகியோரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் பேசி தன்னம்பிக்கையூட்டி சமூகத்தில் தன்னம்பிக்கை உடையவர்களாக வெற்றிகொள்ள முயல வேண்டும்.
மேலும் குந்தவை நாச்சியார் போல் அறிவும் திறனும் உடையவர்களாக மாணவிகள் இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார். முன்னதாக முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் வைஜெயந்திமாலா மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. நுண்கலை மன்றப் பொறுப்பாளர்களான தமிழடியான் வரவேற்றார். நிகழ்ச்சித் தொகுப்பை கரிகாலன் வழங்கினார். நுண்கலை மன்றச்செயலர் மாணவி லக்கிஷா பிரேமிதா நன்றி கூறினார்.