சமரச மையத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

54பார்த்தது
சமரச மையத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
தஞ்சாவூர் மாவட்ட
சமரச மையத்தின் சார்பில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சமரச நாள் விழா கடந்த 5 நாட்களாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் கோர்ட்டு வளாகத்தில் சாஸ்த்ரா கல்லூரி சட்ட மாணவர்கள் கூத்துப் பட்டறை (நாடகம்) நடத்தி சமரசமையம் குறித்துவிழிப் புணர்வு ஏற்படுத்தினர். சமரசமைய தலைவரும், மாவட்ட நீதிபதியுமான
ஜெயஸ்ரீ வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தொடங்கி வைத்து பேசுகையில், வழக்குகளை விரைவில் முடித்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வழக்குகளை முடிவு பெற முனைய வேண்டும். இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் 6 அடி நிலமே சொந்தம். மற்றவை எவையும் நமக்கு சொந்தம் இல்லை. நீதிபதிகள், மீடியேட்டர்கள் அனைவரும் 40 மணிநேரம் இதற்கான பயிற்சி பெற்றுள்ளவர்களை கொண்டே சமரசம் செய்யப்பட்டு வருகிறது. யாரும் சண்டையிடாமல் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சமரச மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி, சார்பு நீதிபதி இந்திராகாந்தி, மோட்டார் வாகன சிறப்பு மாவட்ட நீதிபதி வடிவேல், சார்பு நீதிபதி முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, குற்றவியல் மாஜிஸ்திரேட்டுகள் முருகேசன், சுசீலா, பாரதி மற்றும் வக்கீல்கள், மீடியேட்டர்கள், வழக்கு தொடுத்தவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி