அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

70பார்த்தது
அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் காவேரி லயன் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு மின்விசிறிகள் உள்பட உபகரணங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமாபிரபா, காவேரி லயன் சங்க நிர்வாகிகள், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி