தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஒன்பதாவது முறையாக திமுக வெற்றி

1054பார்த்தது
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஒன்பதாவது முறையாக திமுக வெற்றி
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒன்பதாவது முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை திமுகவின் கோட்டை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டு தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தொடங்கப்பட்டபோது காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1957, 1962, 1967, 1971, 1977, 1979, (இடைத்தேர்தல்) 1980, 1984, 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 என இத்தொகுதியில் 19 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி எட்டு முறையும், திமுக எட்டு முறையும், அதிமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றிருந்தது.

தற்போது 19வது முறையாக நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதன் மூலம் தஞ்சை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாதனை முறியடித்து ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். எஸ். பழனிமாணிக்கம் ஆறுமுறையும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் இரண்டு முறையும், சிங்காரவடிவேல் நான்கு முறையும், திமுக சார்பில் ஒருமுறையும், அதிமுக சார்பில் ஒரு முறையும் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ். டி. சோமசுந்தரம் இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக வேட்பாளர் முரசொலி தஞ்சை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி