தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு: 2 பேர் மீது வழக்கு

59பார்த்தது
தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு: 2 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் தற்போதைய ஆணையராக இருப்பவர் இரா. மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த 
கே. சுடர்மணிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த முன் விரோதம் காரணமாக தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பி வருவதாக, சுடர்மணி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த பாலு மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் ஆணையர் மே. 31 ஆம் தேதி புகார் செய்தார்.

இதன் பேரில் சுடர் மணி, பாலு மீது மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி