பழுதடைந்த மின் கம்பத்தால் ஆபத்து, மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

72பார்த்தது
பழுதடைந்த மின் கம்பத்தால் ஆபத்து, மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
வல்லம் தேசிய விநாயகர் கோயில் தெருவில் பழுதடைந்துள்ள மின் கம்பத்தை அகற்ற இப்பகுதி கோரிக்கை வேண்டும் மக்கள் விடுத்துள்ளர்.
வல்லம் பேருந்து நிலையம் அருகே உள்ளது தேசிய விநாயகர் கோயில் தெரு. இத்தெரு வழியாகத்தான் சென்னம்பட்டி கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் இந்த
தெருவில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்நிலையில் தேசிய விநாயகர் கோயில் எதிரே மின்கம்பம் பழுதாகி கீழே விழும் நிலையில் காணப்படுகிறது.
கோடை காற்று வீசத் தொடங்கியிருப்பதால் மின் கம்பம் எப்போது விழும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தெரு வில் தனியார் வங்கி, திருமண மண்டபங்கள், தேசிய விநா யகர் கோயில் ஆகியவைகள்
உள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.
இந்நிலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிர் ஆபத்து ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி உடன் பழுதான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி