தபால் வாக்குச் செலுத்திய காவலர்கள்

595பார்த்தது
தபால் வாக்குச் செலுத்திய காவலர்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.
இதில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் 281 நபர்கள், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் 340 நபர்களும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 251 நபர்களும், பட்டுக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் 77 நபர்களும், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 69 நபர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 207 நபர்களும் ஆக மொத்தம் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்களிப்பு நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி
பொதுத் தேர்தலுக்கான
தேர்தல் பொதுப் பார்வை யாளர் கிகேட்டோ சேம. தலைமையில், தேர்தல் காவல் பார்வையாளர் மருத்துவர் சரணப்பா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் முன்னிலையில் வாக்களிப்பு நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தபால் வாக்கு ஒருங்கிணைப்பாளர் ஜனனி சௌந்தர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி