தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சேது செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் நிறுவன தலைவருமான மாயவன் முன்னிலை வகித்தார். செயல் அறிக்கையை பொதுச் செயலாளர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கை விஜயசாரதி ஆகியோர் சமர்ப்பித்தனர்
மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் ஏகநாதன் வரவேற்றார்
மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 13 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்
ஆட்சிக்கு வந்த சுமார் 40 மாதங்கள் ஆன பிறகும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி முதற்கட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்டத்தலைவர் தி. இதய ராஜா நன்றி தெரிவித்தார்
மாநில செயற்குழு கூட்டத்தின் ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.