தஞ்சாவூர்: குறை சொல்வது அண்ணாமலையின் பிறவிக் குணம்; அமைச்சர் கிண்டல்

70பார்த்தது
தஞ்சாவூர்: குறை சொல்வது அண்ணாமலையின் பிறவிக் குணம்; அமைச்சர் கிண்டல்
தஞ்சாவூரில், புதிய கட்டடங்களை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை. செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், மாணவிகளின் நலன் குறித்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட மாணவி, பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவில் இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருந்திருக்கும். 

நமது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியபோதெல்லாம் நிராகரித்து விட்டனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்த மூன்று மணி நேரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

இருப்பினும், இந்த அரசை பாராட்ட மனமில்லாமல், குறை சொல்பவர்களின் மனநிலை தான் குறையாக உள்ளது தவிர, அரசு, காவல்துறை செயல்பாடு சிறப்பாக உள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்டவர் தி.மு.க வைச் சேர்ந்தவர் என்று கூறுவது தவறான செய்தி. எது நடந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் பிறவிக் குணம். மூன்று மாதங்கள் அமைதியாக இருந்த தமிழகத்தில், மீண்டும் தனது குணத்தை அண்ணாமலை காட்டி வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி