காவிரிகரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

50பார்த்தது
காவிரிகரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால், காவிரிக் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, கர்நாடகத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்படுவதால், மேட்டுர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிட வாய்ப்புள்ளதால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ, தற்படம் எடுக்கவோ அந்தப் பகுதிகளுக்கு செல்லக்கூடாது. கால்வாய் நீரோடை பகுதியில் குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி