அரசியல் சட்டத்தை மதித்து பாஜக ஆட்சி நடத்த வேண்டும் -சிஐடியு

79பார்த்தது
அரசியல் சட்டத்தை மதித்து பாஜக ஆட்சி நடத்த வேண்டும் -சிஐடியு
தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில் ஜூன் 7, 8 (வெள்ளி, சனி) ஆகிய இரு தினங்கள் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர். சௌந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் மாவட்டத் தலைவர் ம. கண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக சிஐடியு மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பிஜேபியின் ஏதேச்சதிகார ஆட்சிக்கு கடிவாளமாக மாறி இருக்கிறது. அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும்.  
சிஐடியு அமைப்பு குறிப்பிட்ட கட்சிக்காரர்களை மட்டும் உறுப்பினராகக் கொண்ட அமைப்பல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கிறோம்.  
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கார்ப்பரேட் கம்பெனிகள் இருக்கும்  பகுதிகளில், சங்க உரிமைக்காக, சங்கம் வைத்ததற்காக  பழி வாங்கப்பட்ட தொழிலாளிகளை மீண்டும் பணிக்கு கொண்டுவர  போராட்டங்களை சிஐடியு முன்னெடுத்து கொண்டிருக்கிறது எங்களுடைய அமைப்பு.
அரசுக்கும் எங்களுக்கும் பல முரண்பாடுகள் உள்ளது. அந்த முரண்பாடுகள் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். தீர்வு கிடைக்கா விட்டால் போராடுகிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி