ஆக. 1 தஞ்சை மாவட்ட ஒன்றிய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
ஆக. 1 தஞ்சை மாவட்ட ஒன்றிய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்தும், தமிழ்நாட்டைப் புறக்கணித்த, உ, ணவு மானியத்தை குறைத்த 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்காத, விவசாயத்தை புறக்கணித்த, வேலையின்மைக்கு முக்கியத்துவம் அளிக்காத நாசகர நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகியவற்றின் சார்பில், தஞ்சை மாவட்டத்தில், 10 இடங்களில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.  
இந்த மறியல் போராட்டத்தை, தஞ்சை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் கணபதி நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் கே. பாஸ்கரன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் டி. கண்ணையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ' மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி கிராமம், நகரங்களில் பிரச்சாரம் செய்து துண்டுப் பிரசுரத்தை விநியோகிப்பது' என்றும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி