தஞ்சாவூரில் முதியவரிடம் இணையவழியில் ரூ. 14 லட்சம் மோசடி

564பார்த்தது
தஞ்சாவூரில் முதியவரிடம் இணையவழியில் ரூ. 14 லட்சம் மோசடி
தஞ்சாவூரில் முதியவரிடம் இணையவழியில் ரூ. 14. 41 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாநகரைச் சேர்ந்த 64 வயது முதியவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு டெலிகிராம் செயலியில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தகவல் வந்தது. இதை நம்பிய அவர் மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு முதியவர் பல்வேறு தவணைகளில் ரூ. 14 லட்சத்து 41 ஆயிரத்து 345-ஐ அனுப்பினார். ஆனால், எந்தவித லாபத் தொகையையும் தராத மர்ம நபரை முதியவர் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

மர்ம நபர்கள் அழைப்பை எடுக்காததன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை முதியவர் உணர்ந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் இணையவழி குற்றத் தடுப்பு காவல் பிரிவில் முதியவர் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி