தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம்

259பார்த்தது
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம்
அக்டோபர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் தொடர்பாக தஞ்சாவூர் திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொருளாளர் அண்ணா திக மாவட்ட தலைவர் அமர்சிங் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மாநகர பொருளாளர் துரைசிங்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் அண்ணாதுரை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கண்ணன் கோவிந்தராஜ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் வருகிற அக் 11ஆம் தேதி நடைபெற உள்ள கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தருவதாக தீர்மானிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடகா அரசு முறையாக திறந்து விடாததை கண்டித்தும் உடனடியாக தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசை வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கடை அடைப்பு போராட்டம் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் அக் 11ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி