கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை

58பார்த்தது
கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள், தமிழர் தேசம் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் உள்ள வளவண்ட அய்யனார் கோவில் திருவிழாவில் தங்கள் கிராம மக்கள் பூத்தட்டு எடுத்து சென்றபோது போலீசார் தடியடி நடத்தியதாகவும், இதில் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் பிடித்து சென்ற 10 பேர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் அனுப்ப வேண்டும். தங்கள் கிராமத்தில் இருந்து காவல்துறையினரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தார். அதன்பேரில் அவர்கள் தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டாட்சியர் இலக்கியாவிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி