தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குளத்தில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். பட்டுகோட்டை காசாங்குளத்தில் நேற்று பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. குளத்திற்குள் உள்ள மதில் சுவரை ஒட்டி நின்றவாறு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சுகாதார ஆய்வாளர் அறிவழகன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் வீரர்கள் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டு கரையில் கொண்டு வந்து விட்டனர்.