தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2400 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக கோவை, நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அரவைகளுக்காகவும், அரவை செய்யப்பட்ட அரிசிகள் பொது விநியோகித் திட்டத்தில் விநியோகப்படுவதற்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு அறுவை செய்யப்பட்ட 2500 டன் அரிசி பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகம் செய்வதற்காக கோவை மற்றும் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.