பட்டுக்கோட்டை அம்பாள் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் சுரேந்தர் (வயது 27). இவர் மீது பல்வேறு வழக் குகள் உள்ளன. இந்த நிலை யில் சுரேந்தரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஆட்சியர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், குண்டர் சட்டத்தில் சுரேந்தரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
அதேபோல் கும்பகோ ணத்தை அடுத்த மணஞ்சேரி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவ ருடைய மகன் அய்யர் என்ற சக்திவேல் ( 33). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சக்திவேலுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், ஆட்சியர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில்
திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ், குண்டர் சட்டத்தில் சக்திவேலுவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.