தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ச. முரசொலி 5, 02, 245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக தேமுதிக வேட்பாளர் பி. சிவநேசன் 1, 82, 662 வாக்குகள் பெற்றுள்ளார். டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமானால் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்படி 1, 71, 541 வாக்குகளுக்கு மேல் திமுக வேட்பாளர் முரசொலியும், தேமுதிக வேட்பாளர் பி. சிவநேசனும் பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் உட்பட மற்ற 10 பேரும் டெபாசிட் இழந்தனர்.