பாபநாசம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

1055பார்த்தது
பாபநாசம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டில் இருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் மீது போலீஸார் வழக்கு பதிந்து  அவரை கைது செய்தனர்.

பாபநாசம் அருகே, அம்மாபேட்டை காவல் சரகம், அருந்தவபுரம் ஊராட்சி, ராஜபுரம் கிராமம், தெற்கு தெருவில் வசித்து வருபவர் விவசாயக் கூலித் தொழிலாளி, இவரது மகள் 15 வயது சிறுமி. இவர் வீட்டின் பின்புறம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற  அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் மகன் தீபக் (37), திருமணமானவர். அந்த சிறுமியின் பின்புறமாக சென்று, சிறுமியின் வாயைப் பொத்தி  சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சமடைந்தார்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ஐஸ்வர்யா மற்றும் போலீஸார்  வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு  செய்ய முயன்ற தீபக்கை கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி