தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பேராவூரணி தெற்கு ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் கோவி. இளங்கோ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதில் அதிமுக ஓட்டுநர் அணி அமைப்பாளர் செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.