பேராவூரணி: வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தெரிவிக்க அறிவுரை

78பார்த்தது
பேராவூரணி: வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தெரிவிக்க அறிவுரை
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், பாதுகாப்புக்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

பேராவூரணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், ஆயுத அறை, காவல் நிலைய வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் அவசியம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த பிறகே செல்ல வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் காவல்துறையினர் கண்காணிக்க வசதியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை வீட்டில் தனியாக வைத்து விட்டு செல்லக்கூடாது. 

வங்கி பாதுகாப்பு அறைகளில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அல்லது பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் கொடுத்து செல்ல வேண்டும். வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அது 24 மணி நேரம் இயங்கும் வகையில் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் மற்றும் வெளியூர் செல்லும் போது கண்காணிப்பு கேமராவை அணைத்து விட்டு செல்லக்கூடாது. கேமராவை சாலையை நோக்கி அமைப்பதோடு, வீடுகள், நிறுவனங்களின் பின்புறங்களையும் கண்காணிக்க வசதியாக அமைக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி