திருவாரூர்-காரைக்குடி மின்மயமாக்கல் பணிகளை முடிக்க வேண்டும்

81பார்த்தது
திருவாரூர்-காரைக்குடி மின்மயமாக்கல் பணிகளை முடிக்க வேண்டும்
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தலைவர் ஜெயராமன், செயலாளர் கலியபெருமாள், துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில்
கூறியிருப்பதாவது: -
திருவாரூர்-காரைக்குடி இடையே மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இந்தப்பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக மதுரைக்கும், திருச்சிக்கும் ரயில் இயக்க வேண்டும். சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் மேலும் பல புதிய ரயில்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி