மல்லிப்பட்டினம் ஆமை பிடிபடுவதை தடுக்க கருவி பொருத்தி சோதனை

60பார்த்தது
மல்லிப்பட்டினம் ஆமை பிடிபடுவதை தடுக்க கருவி பொருத்தி சோதனை
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடல் ஆமைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் கருவி, "ஆமை விலக்கு கருவி" (Turtle Excluder Device - TED) என்று அழைக்கப்படுகிறது. இழுவை படகுகளில் மீன்பிடி வலையில் பொருத்தப்படும்போது, ஆமைகள் வலையில் சிக்காமல் தப்பிச் செல்ல இது உதவுகிறது. 

கடல் ஆமைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தப் பரிசோதனை நடைபெறுகிறது. இந்த ஒத்திகைக்கு எம்பி டி நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் ரவீந்திரன், மீன்துறையிலிருந்து ஆய்வாளர் வீரமணி, என்போர்ட் டிபார்ட்மென்ட் ராஜா மற்றும் போர்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சாகர் மித்ரா, பணியாளர்கள் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி