நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முத லிடத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்மாவட்டம், பேராவூரணியில் வேளாண்மைத் துறை மற்றும் '' பவுண்டேஷன் சார்பில், இயற்கை விவசாய நெல் விளைச்சல் போட்டி தொடக்க விழா மற்றும் தென்னை விவசாயத்திற்கு பாடுபட்டமுன்னோடி விவசாயி ஆ. பழனிவேலுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் நல்ல முத்துராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு தலைமை வகித்து அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பேசி யது:
இயற்கை விவசாயிகளை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்த எலக்ட்ரானிக் நேஷனல் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங் என்ற மின்னணு சம்பந்தப் பட்ட தேசிய அளவிலான இ-காமர்ஸ் சந்தையை ஏற்படுத்தியுள்ளோம். விவசாயிகள் நவீன சந்தைகளை பயன்படுத்த வேண்டும். இயற்கையை பாதுகாத்தால்தான் இந்த பூமிப் பந்தை நாம் காக்க முடியும் என்றார் அமைச்சர்.
விழாவில் 'ழ' பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் துரை. நீலகண்டன்,
நிறுவனர் கார்க்கி அசோக்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.