தஞ்சை: குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தொடர் கருத்தரங்கம்

68பார்த்தது
தஞ்சை: குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தொடர் கருத்தரங்கம்
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறையில் தொடர் கருத்தரங்கம், பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வாக மார்ச் 18-ல் தென்னாப்பிரிக்காவில் காந்தியத் தடம் - பயண அனுபவங்கள் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வில், மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம், காந்தி தென்னாப்பிரிக்காவில் நிலவெறிக்கு எதிராகப் போராடிய அறப்போரினைத் தனது பயண அனுபவத்தின் வழி, கருத்துரை வழங்கினார். 

மார்ச் 19ல் தமிழ் இலக்கியங்களில் இசை என்ற பொருண்மையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்புரையாளராக தமிழ்ப் பல்கலைக் கழக இசைத்துறை இணைப்பேராசிரியர் செ. கற்பகம் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியத்தில் காணலாகும் இசை பற்றிய செய்திகள் மற்றும் அதன் வகைமைகள் குறித்த தன்மையை எடுத்துரைத்தார். மார்ச். 20ல் கணினித்தமிழ்ப் பேரவை சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கணினியில் தமிழை உள்ளிடுதல் என்ற பொருண்மையில் கல்லூரி முதல்வர் அ. ஜான் பீட்டர், தமிழில் மின் வளங்கள் என்ற பொருண்மையில் கல்லூரி நூலகர் ரா. சங்கரலிங்கம் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினர். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் சீ. வைஜெயந்திமாலா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் பு. இந்திராகாந்தி, ரெ. ஹேமலதா, சா. பெரியநாயகி, பொ. திராவிட மணி, ரா. தமிழடியான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தொடர்புடைய செய்தி