நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவின் பேரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டுக்கோட்டை நகராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். இளநிலை பொறியாளர் மனோகரன், கணினி திட்ட உதவியாளர் எட்வின், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் அறிவழகன், மகாமுனி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி எல்லைக்குள் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயத்த பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.