பேராவூரணி கல்லூரியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

81பார்த்தது
பேராவூரணி கல்லூரியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில், அப்துல்கலாம் மரம் நடுவோம் நண்பர்கள் வாட்ஸ்அப் குழு, ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழுமச் செயலாளர் அமர்வாஞ்சிதா தலைமை வகித்தார். சிங்கப்பூர் தொழிலதிபர் மாறன், சதீஷ்குமார் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மா, பலா, நெல்லி, கொய்யா போன்ற பழமரக்கன்றுகளை வழங்கினர். 

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை சிறப்பாக பராமரிக்கும் மாணவிகளுக்கு ஒரு வருடம் கழித்து சிறப்புப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர். இதில் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ஆரஞ்சு, ஆனந்தராஜ், முருகேசன், பெனிசன்ராஜ், முதல்வர்கள், பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி