திருவோணம் அருகே சிவவிடுதிகிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்தார். அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிறகு மூதாட்டியின் சடலத்தை வழக்கமான பாதையில் எடுத்து செல்வது குறித்து மற்றொரு தரப்பினர் தென்னங்கீற்றை வெட்டி மறித்து போட்டனர்.
பிறகு இறந்த மூதாட்டியின் தரப்பில் சடலத்தை வழக்கமான பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி பிரச்சினை ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை வருவாய் ரவிச்சந்திரன், திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அதிகாரிகள் முன்னிலையில் மூதாட்டியின் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.