தஞ்சாவூர் பெரியார் நினைவு தினம் மாலை அணிவித்து  மரியாதை

58பார்த்தது
தஞ்சாவூர் பெரியார் நினைவு தினம் மாலை அணிவித்து  மரியாதை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் பெரியார் சிலைக்கு பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சுப. சேகர், திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி, வீ. கருப்பையா, சி. ஆர். சிதம்பரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி, நகரச் செயலாளர் மூர்த்தி, பாரதி வை. நடராஜன், காங்கிரஸ் சேக் இப்ராஹிம்ஷா, எஸ். ஏ. தெட்சிணாமூர்த்தி, மதிமுக குமார், பெரியசாமி, திராவிடர் விடுதலைக் கழகம் சித. திருவேங்கடம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் த. பழனிவேல், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், வி. சி. க ஆத்ம. ஆனந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி