ஆகஸ்ட் 15-க்கு பிறகு சம்பா சாகுபடியில் நெல் விதைக்கலாம்

65பார்த்தது
ஆகஸ்ட் 15-க்கு பிறகு சம்பா சாகுபடியில் நெல் விதைக்கலாம்
மேட்டூர் அணை நிரம்பி திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரி, குளங்களில் முதலில் நிரப்ப வேண்டும் என மூத்த வேளாண் வல்லுநர் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த மூத்த வேளாண் வல்லுநர் குழுவினர் வி. பழனியப்பன், பி. கலைவாணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடமும் கூறியதாவது:  




நிகழாண்டு மே மாதமே எங்களது குழுவினர் சார்பில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, தென்மேற்கு பருவமழையின் தொடக்கம், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் ஆகியவற்றை கணித்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம் எனக் கூறினோம்.

தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரைவில் அணை நிரம்பி மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு அணைகள் திறக்கப்பட்டால், மேட்டூர் அணையின் கொள்ளளவுக்கு நிகராக டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்கலாம்.  
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்பாடு பணிகளை தொடங்கினாலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பின்னர் விதைகளை விதைக்க வேண்டும். விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றினால் நடவு வரை ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம். அதே நேரத்தில் கூடுதலாக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்" என்றனர்.

தொடர்புடைய செய்தி