இல்லம் தேடிச் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம்

54பார்த்தது
இல்லம் தேடிச் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனுக்கு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
போலியோ மற்றும் தசை திசைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நாட்கள் ஆக, ஆக அவர்களுடைய உடல் உறுப்புகள் பலவீனம் அடைந்து வருகிறது.
வெளியில் செல்ல முடியாமல் மிகவும் வலிகளை சுமந்து வருகின்றனர். அதற்கு மருத்துவம் செய்ய போதிய வசதி இல்லாத ஏழை பெற்றோர்கள் பிள்ளைகளின் வலிகளை கண்டு தவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் வலிகளை உணர்ந்த தமிழக அரசு 6 மாதத்திற்கு ஒரு முறை கோட்ட அளவில் இருதய மருத்துவர்.
முடநீக்கியல் மருத்துவர். நரம்பியல் மருத்துவர் நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

மேலும் வெளியில் அறவே வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அவர்கள் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று முழு பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி