பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 31ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ கலந்துகொள்கிறார். அவரிடம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் ஆகிய தாலுகாக்களில் உள்ள அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.