தஞ்சாவூர் அருகே ஐடிஐ மாணவரை கத்தியால் குத்திய நண்பர் கைது

57பார்த்தது
தஞ்சாவூர் அருகே ஐடிஐ மாணவரை கத்தியால் குத்திய நண்பர் கைது
தஞ்சாவூர் அரசு ஐடிஐயில் படித்து வருபவர் 17 வயது மாணவன். தனியார் ஐடிஐயில் படித்து வருபவர் விஷ் ணுஸ்வரன் (19), நண்பர்கள் இருவரும் தினமும் ஒரே பேருந்தில் செல்வது வழக்கம். பேருந்தில் இடம் பிடிப்பதில் 2 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நாஞ்சிக்கோட்டை வெள்ளச்சாமி கோயிலில் நின்று கொண்டிருந்த 17 வயது மாணவனை, விஷ்ணுஸ்வரன் அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பட்டா கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதில் மாணவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பட்டாக்கத்தி இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணுஸ்வரனை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 17வயது மாணவனை கத்தியால் குத்திய அந்த இளைஞர்கள் பட்டாகத்தியுடன் நின்று போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில், பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்தி