இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், பேராவூரணி நகரக் கிளை சார்பில், கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு நூறாவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆவணச்சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஆர். மூர்த்தி, கருணாமூர்த்தி, எஸ். கே. எம். காசியார், பாரதி வை. நடராஜன், எம். சித்ரவேல், நீலகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.