போதிய இட வசதி இல்லாததால் மரத்தடியில் வகுப்பறை

62பார்த்தது
போதிய இட வசதி இல்லாததால் மரத்தடியில் வகுப்பறை
போதிய இட வசதி இல்லாததால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் உள்ளது. எனவே புதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள ஆறு வகுப்பறை கட்டிடங்களில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் போதிய இட வசதி இல்லாததால் மாணவர்களை வகுப்பறையில் வைத்து பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஆறு ஏழு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் மழை நேரங்களில் சிரமப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். எனவே மாணவர்கள் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி