முதல்வர் ஸ்டாலின் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15ம் தேதி வருகை தருகிறார். 15ம் தேதி வரும் முதல்வர் ரோடு ஷோ, பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா, கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 16ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. அந்த இடத்தில் மேடைகள் அமைக்கும் பணி இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார். ஆர்டிஓ இலக்கியா, மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.