திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தில் பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத வினை தீர்க்கும் பொற்பனை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோ விலில் குடமுழுக்கு கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது திருப்பணி வேலைகள் மும்முர மாக நடைபெற்று வருகிறது. திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றபின் வினை தீர்க்கும் பொற்பனை அய்யனாருக்கும் அதன் பரிவார தெய்வங்களுக்கும் விரைவில் குடமுழுக்கு விழாவை நடத்த கோவில் நிர்வாகிகள், திருப்பணிக்குழுவினர் மற்றும் பொக்கன்விடுதி தெற்கு கிராம பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர்.