தஞ்சாவூரில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

57பார்த்தது
தஞ்சாவூரில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர். சேகர் தலைமை வகித்தார். செயலாளர் ஆர். தில்லைவனம் வேலை அறிக்கையையும், பொருளாளர் உ. சவுந்தரராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் பேசினார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ. சேவையா, தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எம் - சாண்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொங்கல் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாப்பாநாடு நிர்வாகி த. குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி