தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ, ரணி பேரூராட்சியின் முறைகேடுகளை கண்டித்து வரும் ஜன. 3-ம் தேதி அதிமுக சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், தவறிழைத்த திமுகவினருக்கு ஆதரவாக இருந்து வரும் திமுக அரசை கண்டித்தும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜன. 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு. பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஆர், காமராஜ் தலைமையிலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சி. வி. சேகர் முன்னிலையிலும் நடைபெறும். இதில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் எம். பி. , எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் பேராவூரணி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.