சிவகங்கைக்கு 2000 டன் நெல் திருப்பத்தூருக்கு 1250 டன் அரிசி

160பார்த்தது
சிவகங்கைக்கு 2000 டன் நெல் திருப்பத்தூருக்கு 1250 டன் அரிசி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட் டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலை யங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல், 1250 டன் அரிசி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து சிவகங்கைக்கு 2000 டன் நெல், பொது விநியோகத்
திட்டத்திற்காக திருப்பத்தூருக்கு 1250 டன் அரிசி சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி