பட்டுக்கோட்டை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகில் உள்ள குளத்து குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வீரையன் ( 52). தச்சுத் தொழிலாளி அவரது நண்பர் பாண்டித்துரை (43) என்பவருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆவணம் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வீரையனும், பின்னால் அமர்ந்திருந்த பாண்டித்துரையும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வீரையன் பரிதாபமாக பலியானார். பாண்டித்துரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இறந்த வீரையன் மனைவி மேனகா(47) கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் (பொ) பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.