பட்டுக்கோட்டை அருகே விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

51பார்த்தது
பட்டுக்கோட்டை அருகே விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை நடுத்தெரு பகுதியைச்சேர்ந்தவர் செல்லத்துரை (வயது51) விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த செல்லதுரை வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்லத்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அவருடைய மனைவி பரமேஸ்வரி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி