கூட்டுறவுத்துறை தணிக்கையாளராக தேர்வான பெண்

75பார்த்தது
கூட்டுறவுத்துறை தணிக்கையாளராக தேர்வான பெண்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி தரும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு, 12- ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, கிராமப்புற மாணவர்களை அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, செப். 12 இல், புனல்வாசல் கிராமத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டது.  
பள்ளி வளாகத்திலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் பள்ளி நிர்வாகம் சார்பில் மனமுவந்து அளிக்கப்பட்டது.  
இங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மூலம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  
இந்நிலையில் இங்கு பயிலும் மூன்று பேர் குரூப் 2 தேர்வில் முதல் நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுதினர். அதில், பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரின் மனைவி நிர்மலா மேரி ஆஸ்மி (வயது 33) என்ற பெண், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, கூட்டுறவு தணிக்கை துறையில் ஜூனியர் ஆப்பரேட்டிங் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி