தென்னங்குடி உக்கடை பேருந்து நிறுத்தம் சீர் செய்யப்படுமா...?

53பார்த்தது
தென்னங்குடி உக்கடை பேருந்து நிறுத்தம் சீர் செய்யப்படுமா...?
தஞ்சாவூர் மாவட்டம்,  
பேராவூரணி அருகே தென்னங்குடி உக்கடை பால்பண்ணை நிறுத்தம் அருகில், மாவடுகுறிச்சி ஊராட்சி உட்பட்ட பேருந்து நிறுத்தம் உள்ளது.

இதன் வழியாக திருப்பூரணிக்காடு, களத்தூர், திருச்சிற்றம்பலம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில வருடங்களாகவே இந்த பேருந்து நிறுத்தம் பராமரிக்கப்படாமல்,   சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடாரமாகவும் இந்த பேருந்து நிறுத்தம் மாறி விட்டது. இதில், அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை மது பிரியர்கள் போட்டு விட்டுச் செல்கின்றனர். சிலர் மது போதையில் இந்த பேருந்து நிறுத்தத்திலேயே அசுத்தம் செய்து விட்டு செல்கின்றனர்.


எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்து, இதன் அருகில் கிடக்கும் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுகாதாரம் பேணிக் காக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தை உபயோகிக்கும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி