நிறுத்தத்தில் நிற்காத பேருந்தின் ஓட்டுநர் பணியிட மாற்றம்

77பார்த்தது
நிறுத்தத்தில் நிற்காத பேருந்தின் ஓட்டுநர் பணியிட மாற்றம்
பட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளிச்சென்று நிறுத்தி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வியாழக்கிழமை
பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மண்டலம், பட்டுக்கோட்டை கிளை பேருந்து புதன் கிழமை மாலை பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தாமல் தள்ளிச்சென்று நிறுத்தியதால் பள்ளி மாணவிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏறியது தொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. அதனைத்தொடர்ந்து இந் நிகழ்வை ஆய்வுசெய்த மேலாண் இயக்குநர் கே. எஸ், மகேந்திரகுமார், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பணிபுரிந்து அவப்பெயர் ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் எம். செல்வராஜ் நடத்துரர் ஜி. ரவிசங்கர் ஆகியோரை முதுகளத்தூர் மற்றும் கமுதி கிளைகளுக்கு பணியிட மாறுதல் செய்ததுடன் மேலும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார். மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொதுமக்கள், வயதானவர்கள், பெண்கள் குறிப்பாக பள்ளி, மாணவ மாணவிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி