தஞ்சாவூர் அருகே வீட்டின் உடைத்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி ஜான் செபாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் சுப்புராம் மனைவி ஆர்த்தி (25). சுப்புராம் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதால், வீட்டில் இவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவரும் ஜூலை 27 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு
உடல்நிலை சரியில்லாமல் உள்ள உறவினரைப்
பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மறு நாள் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ. 27 ஆயிரம் ரொக்கம் ஸ்மார்ட் வாட்ச், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.