தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 8. 29 கோடியில் கட்டடங்கள் திறப்பு

74பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 8. 29 கோடியில் கட்டடங்கள் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 8. 29 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசுத் துறை கட்டிடங்களை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேற்று பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

தஞ்சாவூர் முனிசிபல் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், புத்தகங்கள், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

மேலும், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், ராவுசாப்பட்டி ஊராட்சி, மருங்குளம் ஊராட்சி கோபால்
நகர், சூரக்கோட்டை ஊராட்சி கீழவஸ்தாச்சாவடி, கூடலூர். மனக்கரம்பை ஊராட்சி ஆகிய இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், ஊரக கால்நடை மருந்தக கட்டிடம், பொது விநியோக அங்காடி, நேரடி நெல் கொள்முதல் நிலையம், வகுப்பறை கட்டிடம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் ரூ. 8, 29, 49, 000 மதிப்பில் அரசுத் துறைகளின் 24 கட்டிடங்களை அமைச்சர் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி