தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் உள்ள தஞ்சை மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 20 மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரிவ்வா தலைமை வகித்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார முதல் நிலை கண் மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தற்போது கண் கண்ணாடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.