பிருந்தாவன் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

51பார்த்தது
பிருந்தாவன் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பட்டுக்கோட்டை பிருந்தாவன் பள்ளிகள் சார்பில் சயின்ஸ் எக்ஸ்போ 2024 அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் தாளாளர் மோகன், பொருளாளர் ரெத்தினக்குமார் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, ரோபோட்டிக்ஸ், கட்டிடக்கலை, வானியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கணிதம் உள்ளிட்ட 11 தலைப்புகளில் தங்களது 900 அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். ஏவுகணைகளை செலுத்துவது, ட்ரோன்களை உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை
வெகுவாக கவர்ந்தது. விவசாய தொழில் நுட்பம், உணவே மருந்து என்கிற வகையில் மூலிகை களை கொண்டு தயாரித்த உணவு வகைகளும் சிறப்பாக இருந்தது. சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வகுப்பு வாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் பள்ளியின் செயலாளர் டாக்டர் கண்ணன், இயக்குனர்கள் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், கௌசல்யா ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன். ராமையா, ராஜமாணிக்கம், காமராஜ், டாக்டர் பிரசன்னா கூத்தபெருமாள் மற்றும் பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அக்பர்அலி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் குமாரி கலந்து கொண்டனர். கண்காட்சியை 3, 000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி